ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு
ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
ஸ்ரீவைகுண்டம்,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் 20 தொல்லியல் அதிகாரிகள் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் 72 பள்ளங்களும், சிவகளையில் 26 பள்ளங்களும் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மனித தாடை எலும்புகள், பற்கள், மண்பாண்ட குவளைகள் போன்றவை இருந்தன. மேலும் அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட பொருட்களும், பழங்காலத்தில் பயன்படுத்திய சுடுமண்ணாலான புகைப்பான், வடிகால் குழாய், செம்பாலான வளையல், மோதிரம், குழந்தையின் எலும்புக்கூடு போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொல்லியல் துறை இயக்குனர்
சிவகளையில் நடைபெற்ற அகழாய்வில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அவற்றில் 19 முதுமக்கள் தாழிகளை தொல்லியல் துறையினர் திறந்து பார்த்து ஆய்வு செய்துள்ளனர். அவற்றிலும் பழங்கால மண்பாண்ட பொருட்கள், மனித தாடை எலும்புகள், பற்கள், நெல்மணிகள் போன்றவை இருந்தன. இங்கு கிடைத்த சுடுமண்பானை தாங்கிகள் வேறு எந்த அகழாய்விலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மண்பாண்டங்களில் தமிழ் பிராமி எழுத்துகளும், கால்பந்து போன்ற வடிவிலான கீறல்களும், குறியீடுகளும் இருந்தன.
இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன் நேற்று சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். அங்கு கிடைத்த பழங்கால பொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் குறித்து அகழாய்வு இயக்குனர்கள் பிரபாகரன், பாஸ்கர், தொல்லியல் அலுவலர்கள் தங்கத்துரை, லோகநாதன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
ஆதிச்சநல்லூர்
பின்னர் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன் பார்வையிட்டார். அங்கு கிடைத்த பழங்கால பொருட்களை புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவற்றையும் உதயசந்திரன் பார்வையிட்டார். அப்போது அவரது முன்னிலையில், அங்குள்ள முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்தனர். அதில் இருந்த எலும்புகளை தொல்லியல் துறையினர் ஆய்வுக்காக சேகரித்தனர்.
தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், புதுச்சேரி வரலாற்று துறை பேராசிரியர் ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.