திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரி திடீர் ஆய்வு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 69 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) டாக்டர் ஜி.அரவிந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனைத்து ஊராட்சிகள் மூலம் மின்வாரியத்துக்கு மின்கட்டணம் செலுத்தியது குறித்தும், நிலுவை கட்டணம் செலுத்த வேண்டியது எவ்வளவு என்பது குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு குடிநீருக்கான கட்டணம் செலுத்துவது குறித்தும், அனைத்து ஊராட்சிகளிலும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது (ஜல் ஜீவன் நிஷன்) குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம் ஊராட்சி) கே.எம்.பழனி, அலுவலக மேலாளர் (நிர்வாகம்) எஸ்.வாசு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேதுராமன், ஜெய்சங்கர், முருகன் உள்பட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.