ஜோலார்பேட்டை பகுதியில், ரெயில்வே பெண் போலீஸ் உள்பட 21 பேருக்கு கொரோனா
ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில்வே பெண் போலீஸ் உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை துரைசாமி நாயுடு தெருவை சேர்ந்த 8 ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் காந்திநகர் பகுதியில் 4 பேருக்கும், சின்னகவுண்டனூர், நியூ காலனி பகுதிகளில் தலா 2 பேருக்கும், சந்தைகோடியூர் பகுதியை சேர்ந்த நகராட்சி ஊழியர், வக்கணம்பட்டி, பழைய ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெரு, புள்ளானேரி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் போலீஸ் ஒருவருக்கும் என மொத்தம் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவமனை சார்பில் அரசு டாக்டர் புகழேந்தி மற்றும் சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தொற்று பாதித்த ரெயில்வே ஊழியர்கள் வசிக்கும் துரைசாமி நாயுடு தெருவில் 60 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் பெண் போலீசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும் உடன் பணிபுரியும் 12 போலீஸ்காரர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ மனை சார்பில் இன்று (சனிக்கிழமை) போலீசாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜோலார்பேட்டை பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை பாரி காலனியை சேர்ந்த 58 வயது ஆண், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 24 வயது ஆண், அரசு சிறுவர் இல்லத்தை சேர்ந்த 32 வயது பெண், 43 வயது ஆண், ஆட்டோ நகரை சேர்ந்த 21 வயது பெண், லம்பா காலனியை சேர்ந்த 37 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிப்காட்டையடுத்த திரு.வி.க. நகரை சேர்ந்த 54 வயது பெண், 63 வயது பெண், சரஸ்வதி நகரை சேர்ந்த 50 வயது ஆண், ஐ.ஓ.பி. நகரை சேர்ந்த 50 வயது ஆண், மணியம்பட்டு பகுதியை சேர்ந்த 42 வயது ஆண், புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த 24 வயது ஆண், ஏகாம்பரநல்லூரை சேர்ந்த 22 வயது பெண், எடப்பாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண், கிருஷ்ணாவரத்தை சேர்ந்த 60 வயது பெண், புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்த 19 வயது ஆண், மருதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், நெல்லிகுப்பம் பகுதியை சேர்ந்த 24 வயது ஆண், 40 வயது ஆண், அம்மூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த 48 வயது ஆண், வடக்கு சைதாப்பேட்டையை சேர்ந்த 43 வயது பெண், நேரு தெருவை சேர்ந்த 75 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடியாத்தம் தாலுகாவில் நேற்று வந்த கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகளில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை, போஸ்பேட்டை, கொண்டசமுத்திரம், விநாயகாபுரம், சேத்துவண்டை, பரதராமி ஆகிய பகுதிகளில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மருத்துவ குழுவினர் குடியாத்தம் மற்றும் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.