கர்நாடகத்தை சேர்ந்தவர் மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடிக்கு கொரோனா
கர்நாடகத்தை சேர்ந்த, மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட 60-க்கும் மேற்பட்ட மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருப்பவர் சுரேஷ் அங்கடி. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டேன். இதில் எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் டாக்டர்களின் ஆலோசனைகளை கேட்பேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார். பா.ஜனதாவை சேர்ந்த இவர் கர்நாடக மாநிலம் பெலகாவி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஆவார்.
முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர்
மேலும் கர்நாடக முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. லேசான நோய் அறிகுறிகள் இருப்பதால் டாக்டர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.