ஓட்டப்பிடாரம் அருகே மகளிர் சுய உதவிக்குழு மூலம் பேவர் பிளாக் தயாரிக்கும் பணி கலெக்டர் ஆய்வு

ஓட்டப்பிடாரம் அருகே மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பேவர் பிளாக் தயாரிக்கும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2020-09-11 17:38 GMT
தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் தெற்கு கல்மேடு பஞ்சாயத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பேவர் பிளாக்் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தொழில் செய்யும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதற்கான உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. தெற்கு கல்மேடு பஞ்சாயத்தில் கங்கை மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ஹாலோ பிளாக் தயார் செய்தல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் தண்ணீர் தொட்டி, கொட்டகை உள்ளிட்டவை அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஹாலோ பிளாக் தயார் செய்யும் எந்திரம் வழங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிக அளவில் ஹாலோ பிளாக் உற்பத்தி செய்து நல்ல லாபம் ஈட்டி பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.

அதிகாரிகள்

ஆய்வின் போது, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெலன் பொன்மணி, கோஸ்டல் எனர்ஜன் நிறுவன முதுநிலை மேலாளர் (மனித வளம்) பீர்முகமது சர்தார், மேலாளர் சுந்தர்ராஜன், சிவில் மேலாளர் அல்டாஸ் பெய்க், தெற்கு கல்மேடு பஞ்சாயத்து தலைவர் முத்துமணி, துணை தலைவர் பாமா கிருஷ்ணமூர்த்தி, மகளிர் சுயஉதவிக்குழு தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்