அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-09-09 21:17 GMT
புதுச்சேரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் அஜீஸ்பாஷா காணொலி காட்சிமூலம் அரசியல் நிலைமை குறித்து பேசினார். மாநில செயலாளர் சலீம் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், தேசிய கவுன்சில் உறுப்பினர் ராமமூர்த்தி, துணை செயலாளர்கள் அபிசேகம், கீதநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், சிவா, தனராமன், சரளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சம்பளம்

*புதுச்சேரியில் பொதுவினியோக முறையை சீர் செய்யவேண்டும்.

*அரசு சார்பு நிறுவனங்களான பொதுத்துறை, கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.

*உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.

*காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும்.

இடஒதுக்கீடு

*நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்கவேண்டும்.

*புதுச்சேரி மாநிலத்தில் அருந்ததியர் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்