நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர்-மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்
நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர்-மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்,
தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாணவர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகர் முன்னிலை வகித்தார்.
இதில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பசீர்அகமது, துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிலால்உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்தில் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு இடையூறாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல் பழனியில் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு தி.மு.க. இளைஞரணி நிர்வாகி லோகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பழனி பஸ் நிலையம் ரவுண்டானா, ஆர்.எப்.ரோடு பெரியார் சிலை ஆகிய 2 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். முன்னாள் நகரசபை தலைவர் வேலுமணி முன்னிலை வகித்தார். இதில் பழனி நகர் முக்கிய வீதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கப்பணி மற்றும் சாக்கடை கால்வாய் கட்டும் பணி தரமற்ற முறையில் நடைபெறுவதை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
குஜிலியம்பாறையில் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பட்டிவீரன்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். காந்திபுரம் அருகே ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. பொருளாளர் போஸ் தலைமையிலும், அய்யம்பாளையத்தில் நகர செயலாளர் அய்யப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்மையநாயக்கனூர் பேரூர் தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
கீரனூர் அருகே தொப்பம்பட்டியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமை தாங்கினார். ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறையில் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.