கொரோனா தடுப்பு பணிகளுக்காக குமரி மாவட்டத்துக்கு கூடுதலாக 2 ஆம்புலன்சுகள் - தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக குமரி மாவட்டத்துக்கு கூடுதலாக 2 ஆம்புலன்சு சேவையை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு கூடுதலாக இரண்டு 108 ஆம்புலன்சுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கி, 2 ஆம்புலன்ஸ்சுகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார். பின்னர் தளவாய் சுந்தரம் கூறியதாவது:-
தமிழக அரசு தற்போதைய கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் தரமான சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சிறப்புடன் வழங்கி வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 13 ஆம்புலன்சுகள் (108) பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இரண்டு ஆம்புலன்சுகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 15 ஆம்புலன்சுகளில் 7 ஆம்புலன்சுகள் கொரோனா நோயாளிகளுக்காக செயல்படுகிறது. ஒரு ஆம்புலன்ஸ் பச்சிளம் குழந்தைகளுக்காக இயங்கிவருகிறது. இந்த வாகனங்கள் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மொத்தம் 6,830 கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், குணமடைந்தவர்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அழைத்துச் செல்லும் பணியும் நடைபெற்று வருகிறது. புதிதாக மேலும் 2 ஆம்புலன்சுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்துச் சென்று விரைவாக சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு தளவாய் சுந்தரம் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஜாண் பிரிட்டோ, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன் என்ற சந்துரு, 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபின் கிங்ஸ்டன் ராஜ், சுகுமாறன், கே.எல்.எஸ்.ஜெயகோபால், ரபீக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.