‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர், பல்லடத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-09-09 04:27 GMT
அனுப்பர்பாளையம்,

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 15 வேலம்பாளையம் பகுதி இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனுப்பர்பாளையம்புதூர் மாநகராட்சி பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன், பகுதி பொருளாளர் ஆனந்தகுமார், வட்ட செயலாளர்கள் குட்டிகுமார், சண்முகம், இளைஞரணி நிர்வாகிகள் ராம்குமார், புருஷோத்தமன், பிரதீஷ், இந்திரன், பத்மநாபன், ரங்கசாமி, வெள்ளியங்கிரி, பிரான்சிஸ், மாணவரணி நிர்வாகிகள் சந்துரு, ஆனந்த், கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெங்கமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் மச்சி முத்துக்குமார், மாநகர மாணவரணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, விவசாய அணி அமைப்பாளர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் புருஷோத்தமன், பத்மநாபன், ஸ்ரீதர், ராஜேஷ், ஜெரோம்ராஜ், பாஸ்கர், ஆனஸ்ட்ராஜ் உள்பட இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பல்லடம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் அருகே நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் பாலமுருகன், சிவக்குமார், சம்பத், சவுந்தர்ராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல பல்லடம் ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் கணபதிபாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்லடம் நகரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெகதீஷ், மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்