செஞ்சி, திண்டிவனம், சின்னசேலத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

செஞ்சி, திண்டிவனம், சின்னசேலத்தில் தி.மு.க.வினர் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-09 01:33 GMT
சின்னசேலம்,

தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரியும், பள்ளியில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்துவதை முறைப்படுத்திட கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சையத்ரிஸ்வான், மாவட்ட தொழில்நுட்ப அணி மொக்தியார், பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆன்ந்த் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பிரபு, சர்தார், செந்தில்முருகன், குமரன், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பழைய நீதிமன்றம் எதிரில் வக்கீல் அசோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நவீன்பாலாஜி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முஸ்தபா, நகர இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார்,நகர மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜ், இலியாஸ், கோகுல், வசந்த், முத்தமிழ், வக்கீல்கள் பாங்கைசேகர், மோகன், செந்தில் குமார், புஷ்பராஜ் தமிழருவி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் கிராமத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கருப்பு கொடி ஏந்தி கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப் பிள்ளை தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்