முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து 300 போலீசார் திருவண்ணாமலை சென்றனர்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

Update: 2020-09-09 00:03 GMT
வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அவர் இன்று (புதன்கிழமை) வருகை தருகிறார். இதையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் முக்கிய சாலைகளில் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 300 பேர் நேற்று காலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து வேன், பஸ்களில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு பாதுகாப்பு பணி முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் வேலூர் திரும்பி வருவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்