நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தி.மு.க. இளைஞரணி சார்பில் வள்ளியூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு ஒன்றிய தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் களக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் நகர தி.மு.க இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏசுதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பணகுடியில் நகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோபால கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கோட்டை
செங்கோட்டையில் நெல்லை மேற்கு மாவட்ட மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் நெல்லை மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தனது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் நகர இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பின்னர் நகர இளைஞரணி சார்பில் காளியம்மன் கோவில் தெரு, கருப்பன் தெரு, மேலூர் அரசு பள்ளி அருகில், மேலூர் நாடார் தெரு, பம்புஹவுஸ் ரோடு ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுரண்டை
சுரண்டை நகர மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் கலைஞர் அறிவாலயம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
அம்பை நகர இளைஞர் அணி சார்பில், இந்து தொடக்கப்பள்ளி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.