திருவள்ளூர், மீஞ்சூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மீஞ்சூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-08 23:35 GMT
திருவள்ளூர்,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தியும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் பஜாரில் நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனை படி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு கமலநாதன் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சாந்தகுமார், குணசேகரன், ராயல் பாஸ்கர், நாகராஜ், குமரேசன், பிரவீன், விஜய், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்பாக்கம்

கவரைப்பேட்டை அடுத்த பண்பாக்கத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மீஞ்சூர்

மீஞ்சூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தன்சிங், தமிழரசன், ராஜா, பாளையம், முனுசாமி, கஸ்தூரிதசரதன், சக்திவேல், ராமமூர்த்தி, வல்லூர்சேகர், ஜோதி, லோகநாதன், கிரிதர், விக்னேஷ்உதயன், கலைவாணன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கையில் கருப்பு கொடியும் பதாகையையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி அமைப்பாளர் கோகுல் தலைமை தாங்கினார். மாநில பொது குழு உறுப்பினர் அபிராமிகுமரவேல், நகர செயலாளர் அப்துல்ரஷீத், இளைஞர் அணி அமைப்பாளர் அப்துல்ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞர் அணி துனை அமைப்பாளர்கள் நரேஷ், ஜீவா, நிர்வாகிகள் வினோத், பாபு, கோல்ட்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டேவிட் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் நாகலிங்கம், ஊராட்சி பிரதிநிதி மேகவண்ணன், இலக்கிய அணி சங்கர் ,பொன் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்