நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தியும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தியும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணியினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் மறைமலைநகரில் உள்ள அவரது வீட்டு வாசல் முன்பு நின்றப்படி இளைஞரணி, மாணவரணியினர் தங்களது கைகளில் மத்திய அரசே, நீட் தேர்வை ரத்து செய், மாநில அரசே ஆன் லைன் வகுப்புகளை முறைப்படுத்து என்ற வாசகத்துடன் உள்ள பதாகைகளை ஏந்தியபடி சமூக இடைவெளியை பின்பற்றி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்.
இது போல காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணியினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுப்பட்டினம்
கல்பாக்கத்தை அடுத்த புதுப் பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் தலைமையில் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பட்டினம் ஊராட்சி செயலாளர் தாஜுதீன், அவைத் தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் நிர்வாகிகள் சாகுல், கதிர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் ஆங்காங்கே தி.மு.க. வினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.