நடிகை கங்கனா ரணாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து விசாரணை மந்திரி அனில் தேஷ்முக் தகவல்

கங்கனா ரணாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.

Update: 2020-09-08 19:37 GMT
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத்தின் முன்னாள் காதலன் ஆத்யாயன் சுமன். இவர் பேட்டி ஒன்றில் கங்கனா போதைப்பொருள் பயன்படுத்துவார் என்றும், தன்னை அதை பயன்படுத்த வலியுறுத்தியதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘பழம்பெரும் நடிகர் சேகர் சுமனின் மகனான ஆத்யாயன் சுமனுடன் நடிகை கங்கனா உறவில் இருந்தார். அப்போது கங்கனா போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள்" என்றார்.

மும்பை நகர் மற்றும் மும்பை போலீசாரை பற்றி நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நடிகைக்கு பாதுகாப்பு

ஆளும் கட்சியினர் எதிர்ப்புக்கு இடையே இன்று (புதன்கிழமை) மும்பை வருவதாக கங்கனா ரணாவத் சவால் விட்டு இருந்தார். மும்பை வரும்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு இந்திய குடியரசு கட்சியினர் (ஏ) பாதுகாப்பு வழங்குவார்கள் என அக்கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்