பெரம்பலூர் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
பெரம்பலூர் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா, பெரம்பலூரில் துறையூர் சாலையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினார்.
இதில் பெரம்பலூர் தாலுகா கவுல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை நேரு மேல்நிலைப்பள்ளி முதுகலை உயிரியல் ஆசிரியர் அறிவேந்தன், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நெசவு சிறப்பு ஆசிரியர் ஜோதிவேல், லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள், பெரம்பலூர் ஆர்.சி. பாத்திமா தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை புஷ்பாமேரி, எளம்பலூர் இந்திராநகர் தந்தை ரோவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அருள்செல்வி, பெரம்பலூர் மவுலானா மானிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜுனைதா, அன்னமங்கலம் ஆர்.சி. சிறுமலர் தொடக்கப்பள்ளி இடைநிலை உதவி ஆசிரியை ஆரோக்கியசெல்வி, திருமாந்துறை புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தாமஸ் மரியசெல்வம் ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரி மீனாள், குழந்தை ராஜன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.