478 பேருக்கு புதிதாக கொரோனா: புதுச்சேரியில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
புதுவையில் கொரோனாவினால் புதிதாக 478 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 525 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,073 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் புதிய பாதிப்பினைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது 503 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் முத்தியால்பேட்டை பெருமாள்நாயுடு வீதியை சேர்ந்த 52 வயது ஆணும், ஜிப்மரில் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த 66 வயது மூதாட்டி, தட்டாஞ்சாவடி காந்தி நகரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, ரெட்டியார்பாளையம் நண்பர்கள் நகரை சேர்ந்த 87 வயது முதியவரும் இறந்துள்ளனர்.
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிந்த சாலையை சேர்ந்த 40 வயது ஆண், ரெட்டியார்பாளையம் ஜெயா நகரை சேர்ந்த 81 வயது முதியவர், பாகூர் பங்களா வீதியை சேர்ந்த 67 வயது முதியவர், நெல்லித்தோப்பு ஜெகதாம்பாள் வீதியை சேர்ந்த 70 வயது முதியவர், தர்மதுரை வீதியை சேர்ந்த 50 வயது ஆண், முதலியார்பேட்டை கடலூர் மெயின்ரோட்டை சேர்ந்த 74 வயது முதியவர், பூமியான்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகியோர் இறந்துள்ளனர்.
84 ஆயிரம் சோதனை
புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 84 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 65 ஆயிரத்து 657 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 316 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் 4 ஆயிரத்து 856 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,752 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 104 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 12 ஆயிரத்து 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
325 பேர் உயிரிழப்பு
மாநிலத்தில் இதுவரை 325 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 275 பேரும், காரைக்காலில் 19 பேரும் ஏனாமில் 31 பேரும் உயிரிழந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.88 சதவீதமாகவும், குணமடைவது 70.08 சதவீதமாகவும் உள்ளது.
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சுகாதார பணியாளர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக பணியாணை வழங்கப்பட்டு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். டிரைவர்கள் தேர்வு இன்னும் ஒரு வாரத்துக்குள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.