முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை தொடர்ந்து சரத்பவாருக்கு போனில் மிரட்டல் போலீசார் தீவிர விசாரணை
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் போன் அழைப்பு வந்துள்ளது.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்கு நேற்று முன்தினம் மர்ம நபர் போன் மூலம் தொடர்புகொண்டு, தான் துபாயில் இருந்து பேசுவதாகவும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் முதல்-மந்திரியிடம் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் போன் ஆபரேட்டர் அழைப்பை முதல்-மந்திரிக்கு மாற்றவில்லை.
இந்த மர்ம அழைப்பை தொடர்ந்து ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாருக்கு மர்ம மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
மிரட்டல் அழைப்பு
அதாவது மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கின் நாக்பூர் அலுவலகத்திற்கு நேற்று போன் மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கண்டறியும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தீவிரமான பிரச்சினை
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு மிரட்டல் அழைப்பு வந்தது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும்.
சமூக விரோத சக்திகள் மீண்டும் தங்கள் தலையை உயர்ந்த முயற்சிக்கின்றன. மாநில உள்துறை இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தும்” என்றார்.
தேவேந்திர பட்னாவிஸ்
இதேபோல் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “இந்த அச்சுறுத்தல் அழைப்புகள் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும்.
இது நிஜமாகவே அச்சுறுத்தல் அழைப்புகள் தானா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டும்” என்றார்.