கீழக்கரை அருகே மிதவை தயாரித்து இலங்கைக்கு தப்ப முயன்றவர் கைது உதவிய நண்பர்களும் சிக்கினர்
மிதவை தயாரித்து இலங்கைக்கு தப்ப முயன்றவரும், அவருக்கு உதவியை நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழக்கரை,
இலங்கை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர், முகமது அலி (வயது 43). இலங்கையில் ஏற்பட்ட இறுதிகட்ட உள்நாட்டு போரின்போது கடந்த 2006-ம் ஆண்டு இந்தியா வந்தார். இவரது விசா காலம் முடிந்த பின்னரும் இலங்கைக்கு திரும்பிச் செல்லாமல் தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.
இந்தநிலையில் முகமது அலி மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்லும் நோக்கில், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஏறான்துறை கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மிதவை படகு போன்று தயாரித்து, அதன் மூலம் இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து ஏர்வாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் ஏறான்துறை கடற்கரைக்கு விரைந்து சென்று முகமது அலி மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹசன் (35) சாகுல்ஹமீது (29) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏர்வாடி காட்டுப்பள்ளிக்கு வந்து தங்கி நோட்டமிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமது அலியிடம் இருந்து இந்திய, இலங்கை ரூபாய் நோட்டுகள், பாஸ்போர்ட்டு மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சமீபகாலமாக தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளும் கடத்தப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே பிடிபட்ட 3 பேரும் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.