நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 235 பேருக்கு கொரோனா தொற்று
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 235 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 132 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பணியாற்றிய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டன. நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் 40 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
நாங்குநேரி பகுதியில் 13 பேர், சேரன்மாதேவி பகுதியில் 5 பேர், களக்காடு பகுதியில் 17 பேர், மானூர் பகுதியில் 19 பேர், ராதாபுரம் பகுதியில் 4 பேர், வள்ளியூர் பகுதியில் 5 பேர், அம்பை பகுதியில் 8 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 11 பேர், பாப்பாக்குடி பகுதியில் 4 பேர் என உள்பட 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2 பேர் பலி
இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகின்ற 11 ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 315-ஆக அதிகரித்து உள்்ளது.
இவர்களில் 8 ஆயிரத்து 957 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,171 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 முதியவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 187-ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி-தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள் உள்பட 53 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812-ஆக உயர்ந்து உள்ளது. 683 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 108 பேர் இறந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 738-ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 961 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 662 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளனர்.