கர்நாடகத்தில் புதிதாக 9,319 பேருக்கு வைரஸ் தொற்று கொரோனா பாதிப்பில் சென்னையை தாண்டியது பெங்களூரு
கர்நாடகத்தில் நேற்று புதிதாக 9,319 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னையை பெங்களூரு தாண்டி விட்டது.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 9,319 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 95 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,393 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 180 பேர், பல்லாரியில் 396 பேர், பெலகாவியில் 427 பேர், பெங்களூரு புறநகரில் 93 பேர், பெங்களூரு நகரில் 2,824 பேர், பீதரில் 83 பேர், சாம்ராஜ்நகரில் 41 பேர், சிக்பள்ளாப்பூரில் 81 பேர், சிக்கமகளூருவில் 239 பேர், சித்ரதுர்காவில் 261 பேர், தட்சிண கன்னடாவில் 326 பேர், தாவணகெரேயில் 221 பேர், தார்வாரில் 311 பேர், கதக்கில் 194 பேர், ஹாசனில் 324 பேர், ஹாவேரியில் 295 பேர், கலபுரகியில் 165 பேர், குடகில் 38 பேர், கோலாரில் 119 பேர், கொப்பலில் 198 பேர், மண்டியாவில் 230 பேர், மைசூருவில் 686 பேர், ராய்ச்சூரில் 187 பேர், ராமநகரில் 68 பேர், சிவமொக்காவில் 329 பேர், துமகூருவில் 304 பேர், உடுப்பியில் 217 பேர், உத்தரகன்னடாவில் 247 பேர், விஜயாப்புராவில் 96 பேர், யாதகிரியில் 139 பேர் உள்ளனர்.
9,575 பேர் குணமாகினர்
கொரோனாவுக்கு பல்லாரி, பெலகாவியில் தலா 8 பேர், பெங்களூரு நகரில் 38 பேர், தார்வாரில் 6 பேர், மைசூருவில் 5 பேர் உள்பட மொத்தம் 95 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் நேற்று 74 ஆயிரத்து 384 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டன. ஒரே நாளில் 9,575 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் இதுவரை 2 லட்சத்து 92 ஆயிரத்து 873 பேர் குணம் அடைந்துள்ளனர். 99 ஆயிரத்து 266 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 775 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இதனால் தமிழ்நாடு தலைநகர் சென்னையை பெங்களூரு பின்னுக்கு தள்ளிவிட்டது. சென்னையில் நேற்று முன்தினம் வரை 1 லட்சம் 40 ஆயிரமாக இருந்தது. ஆனால் பெங்களூருவில் நேற்றுடன் சேர்த்து கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 ஆக உள்ளது. தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாகவும், பெங்களூருவில் குறைவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.