ஈரோட்டில் 5 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈரோட்டில் 5 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈரோடு,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபடாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இந்த மாதம் 30-ந்தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி கிறிஸ்தவ தேவாலயங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனையில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேவாலயம்
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெறவில்லை. இந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அதன்படி ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் நினைவாலயம் உள்பட மாநகர் பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக ஆலயத்துக்கு வந்தவர்களுக்கு கிருமி நாசினி கொடுக்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களது உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.