தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், குடும்பன், பண்ணாடி, கடையன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அரசாணை வெளியிட வலியுறுத்தி கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடர் போராட்டத்தின் 300-வது நாளையொட்டி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி தலைவி அழகுராணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.