சேலம் மாவட்டத்தில், மேலும் 239 பேருக்கு கொரோனா - பெண் உள்பட 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 239 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெண் உள்பட 7 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நோய் தொற்றால் 214 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 167 பேர், மகுடஞ்சாவடியில் 6 பேர், ஓமலூரில் 10 பேர், சேலம் ஒன்றிய பகுதிகளில் 6 பேர், தாரமங்கலத்தில் 9 பேர், ஆத்தூரில் 9 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், பனமரத்துப்பட்டியில் 5 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 3 பேர், தலைவாசலில் 6 பேர், வாழப்பாடியில் 3 பேர், எடப்பாடி, மேச்சேரி, நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்திற்கு கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 2 பேர் மற்றும் நாமக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வந்த தலா ஒருவர் வீதமும், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது. 293 பேர் குணம் அடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 56 வயது ஆண், சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 72 வயது ஆண், சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் என 3 பேரும் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் சேலத்தில் உள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 வயது பெண், 75 வயது ஆண், 81 வயது ஆண் மற்றும் 32 வயது பெண் ஆகிய 4 பேரும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.