விருதுநகர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்தது - புதிதாக 104 பேருக்கு தொற்று; 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 14,018 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-05 02:13 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 214 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 13,914பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 5,374 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 12,278 பேர் இது வரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 72 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 113 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சிவகாசி ரிசர்வ்லைனை சேர்ந்த 44 வயது பெண், திருப்பதிநகரை சேர்ந்த 41 வயது நபர், சித்துராஜபுரத்தை சேர்ந்த 23, 29 வயது பெண்கள், 23 வயது நபர், விருதுநகர் அல்லிதெருவை சேர்ந்த 30 வயது பெண், தாயில்பட்டியை சேர்ந்த 66 வயது மூதாட்டி, திருத்தங்கலை சேர்ந்த 35 வயது பெண், எஸ்.என்.புரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ராஜபாளையம், வெங்காநல்லூர், முகவூர், பெருமாள்பட்டி, வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, மம்சாபுரம், கொங்கன்குளத்தை சேர்ந்த 9 பேர், திருவேங்கடபுரத்தை சேர்ந்த 2 பேர், புலிப்பாறைப்பட்டியை சேர்ந்த 5 பேர், குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த 39 வயது பணியாளர் மற்றும் கன்னிச்சேரிபுதூர், ஆவுடையாபுரம், சித்தனேந்தல், மலைப்பட்டி, பாலையம்பட்டி, உலக்குடி, பனையூர், மல்லி, அருப்புக்கோட்டை சாத்தூர், ரெட்டியபட்டி, சுந்தரராஜபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14,018 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து இம்மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை 3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவுறுத்தியபடி மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தால்தான் நோய் தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்பு ஏற்படும். பொது போக்குவரத்து தொடங்கிவிட்ட நிலையில் பரவலாக மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் செய்திகள்