பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-04 22:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கொரோனா ஊரடங்கினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி ஒரு நாளைக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கியுள்ள வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

நகர்புறத்தில் வேலையின்றி தவித்து வரும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கும் வகையில் நகர்புற வேலை உறுதியளிப்பு திட்டம் கொண்டுவர வேண்டும். கடும் நெருக்கடியில் சிக்கி உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், கட்சியின் நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காந்தி, தாஜுதீன், விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சுஜாதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம், நகர செயலாளர் மாரியப்பன், நகர துணை செயலாளர் தர்மதாஸ், நிர்வாகி குணசேகரன், காளிமுத்து, செல்லமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கலைச்செல்வன், நகர துணை செயலாளர் தனிக்கொடி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் மணி, விவசாய சங்க நகர செயலாளர் கலியபெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் சின்னக்கண்ணு, செல்வகுமார், விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாரியப்பன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்