பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு கூடுதலாக 3 சீருடைகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு கூடுதலாக 3 சீருடைகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் கொழிஞ்சிக்காடு பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கொங்கர்பாளையம் மற்றும் அரக்கன்கோட்டை பகுதிகளில் கட்சி அலுவலகத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
கூடுதலாக சீருடைகள்
அரக்கன்கோட்டை பகுதியில் மேலும் ஒரு மேல்நிலைப்பள்ளி திறக்கப்படும். பள்ளிக்குழந்தைகளுக்கு வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் ‘ஷூ’ வழங்கப்படும். அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு ஏற்கனவே ஒரு சீருடை வழங்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் கூடுதலாக 3 சீருடைகள் வழங்கப்படும்.
இந்த பகுதியில் படித்த 3 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.