நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி தூத்துக்குடியில் 45 பேர் பாதிப்பு
நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 4 பேர் பலியானார்கள். தூத்துக்குடியில் 45 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர் உள்பட 114 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 39 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் ஒரு பெண்ணுக்கும், அவருடைய 3 வயது, ஒரு வயது குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, நாங்குநேரி, களக்காடு, மானூர், பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 68 பேருடன் சேர்த்து 8 ஆயிரத்து 659 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை 182 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி-தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 ஆயிரத்து 963 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 625 பேர் நெல்லை, தென்காசி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 2 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 45 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 633 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 761 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 757 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 115 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.