பாலவாக்கத்தில் முதியோர் இல்லத்தில் 58 பேருக்கு கொரோனா
பாலவாக்கத்தில் பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.;
ஆலந்தூர்,
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட பாலவாக்கம் எம்.ஜி.ஆர். சாலையில் பெண்களுக்கான முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 109 பேர் தங்கி உள்ளனர். இந்த இல்லத்தில் 30 உதவியாளர்களும் இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்த முதியோர் இல்லத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
58 பேருக்கு கொரோனா
இதையடுத்து முதியோர் இல்லத்தில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
உடனடியாக கொரோனா பாதித்த 58 பேரையும் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு கிண்டி கிங்ஸ் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முதியோர் இல்லம் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
ஒரே நேரத்தில் முதியோர் இல்லத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்கள், காப்பகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.