எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 62 வழக்குகள் வாபஸ் கர்நாடக அரசு முடிவு

கர்நாடகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 62 வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-09-04 19:57 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மந்திரிசபை துணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு வழக்குகளை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை அறிக்கையை வழங்கியது.

அதன் அடிப்படையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது உள்ள 62 வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை சட்டத்துறை மந்திரி மாதுசாமி தெரிவித்தார்.

இதில் முக்கியமாக மந்திரிகள் சி.டி.ரவி, மாதுசாமி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், எம்.பி.க்கள் பிரதாப்சிம்ஹா, சுமலதா அம்பரீஷ், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ., ஹாலப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

போலீஸ் துறை எதிர்ப்பு

இந்த வழக்குகள் அனைத்தும் பொது நலனுக்காக போராடியது தொடர்பானவை என்று மந்திரி மாதுசாமி தெரிவித்தார். கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் போடப்பட்ட இத்தகைய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்குகளை வாபஸ் பெற சட்டம் மற்றும் போலீஸ் துறை எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்