மைசூரு தசரா விழா குறித்து எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 8-ந் தேதி நடக்கிறது
மைசூரு தசரா விழா குறித்து எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் வருகிற 8-ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
பெங்களூரு,
ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி மைசூருவில் உலக புகழ் பெற்ற தசரா விழா கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முத்தாய்ப்பாக விஜயதசமி பண்டிகை அன்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் யானைகள் புடைசூழ நடைபெறும் இந்த ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை இந்த தசரா விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுவதையொட்டி மக்கள் ஒரு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தசரா விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தசரா விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
8-ந் தேதி நடக்கிறது
இதில் துணை முதல்-மந்திரிகள், மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
இதில் தசரா விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.