சாலையின் நடுவில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் - மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
திருப்பூரில் கஞ்சம்பாளையம் பகுதியில் சாலையில் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் 2-ம் மண்டல அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி கஞ்சம்பாளையம் 21-வது வார்டு பகுதியாகும். இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி நீண்ட நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். குப்பைத் தொட்டி கிடையாது, மற்ற பகுதிகளை போல் சுகாதார பணியாளர்கள் வீட்டில் வந்து குப்பை வாங்குவதற்கும் வருவதில்லை. எனவே குப்பையை தினமும் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். ஊருக்குள் நுழையும் இடத்திலேயே சாக்கடை குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சாக்கடையை அப்புறப்படுத்த வேண்டும்.
சாலை நடுவில் போக்குவரத்திற்கு இடையூராக விளங்கும் பல்லாண்டு பழமையான பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டி உள்ளது. இதை இடித்து அகற்ற வேண்டும். பள்ளிக்கு அருகில் ஆபத்தான முறையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிய கிணறு உள்ளது.
இதை மூட வேண்டும். பல மாதங்களாக சரி செய்யப்படாத தெருக்குழாய் இணைப்பு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. மோட்டார் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சசிகுமார், லாரன்ஸ், செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.