மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் கொரோனாவுக்கு பலி
மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கொரோனாவுக்கு பலியானார்.
புதுச்சேரி,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் (வயது 70). இவருக்கு கடந்த 28-ந்தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவர் மரணமடைந்தார்.
கொரோனாவுக்கு பலியான டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் 1985-ம் ஆண்டு உருளையன்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். எம்.ஜி. ஆர். மறைவுக்குப்பின் அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.
இந்தநிலையில் 2001-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2006 தேர்தலிலும் அவர் வெற்றிபெற்றார். 2012 ஆண்டு முதல் 2014 வரை புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளராகவும் பதவி வகித்தார்.
அதன்பின் 2018 முதல் மக்கள் நீதிமய்யத்தின் புதுவை மாநில தலைவர் பதவியை வகித்து வந்தார். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் புதுவை எம்.பி. தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், சுகந்தி, சுந்தர் என்ற மகனும் உள்ளனர்.
டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் மறைவுக்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.