ஊரப்பாக்கம் அருகே தி.மு.க. கிளை செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் சிக்கினர்
ஊரப்பாக்கம் அருகே தி.மு.க. கிளை செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கததை அடுத்த மண்ணிவாக்கம் அண்ணாநகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் .பார்த்திபன் (வயது 36). பெயிண்டரான இவர் அண்ணாநகர் தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு ஆதனூர் கூட்ரோடு அருகே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் பார்த்திபன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். மேலும் 2 தனிப்படை போலீசாரும் இந்த கொலையில் தொடர்புடைய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் ஆதனூர் மேம்பாலம் அருகே நேற்று காலை சுற்றித்திரிந்து கொண்டிருந்த 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது பார்த்திபனை வெட்டிக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் ஒரகடம் அருகே உள்ள நாவலூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த முரளி (30), ஹரிஷ் (22), பிரபு(20), ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த புகழ்வாணன் (22), விக்னேஷ் (21), பார்த்திபன் (22) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. கிளை செயலாளர் பார்த்திபன், மண்ணிவாக்கம் அண்ணாநகர் ஆட்டோ நிறுத்தத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியை ஏற்றுவதற்கு இடையூறாக இருந்தார். மேலும் 2 முறை கொடி ஏற்றும் போது அவர் தடுத்து நிறுத்தினார். இதனால் அவரை வெட்டிக்கொலை செய்தோம் எனறு கைதான 6 பேரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் கூடுவாஞ்சேரி போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 5 வீச்சரிவாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.