கடந்த 3 மாதத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு 14 லட்சம் பயணிகள் வருகை

கடந்த 3 மாதத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு 14 லட்சம் பயணிகள் வருகை தந்து உள்ளனர்.

Update: 2020-09-03 02:21 GMT
பெங்களூரு, 

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் விமான சேவையை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனால் உள்நாடு, வெளிநாடு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.

இதையடுத்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு சென்னை, மும்பை, தூத்துக்குடி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முன்பு போல பயணிகள் எண்ணிக்கை இல்லை. கொரோனா பீதியால் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை 3 மாதத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு 14 லட்சம் பயணிகள் வருகை தந்து உள்ளனர். இதில் மே-ஜூன் மாதத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 873 பேரும், ஜூன்-ஜூலை மாதத்தில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 384 பேரும், ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 374 பேரும் பயணம் செய்து உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 29,950 பேர் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து உள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் விமான நிலையம் செயல்பட தொடங்கியதும், ஒரே நாளில் அதிகம் பயணிகள் 30-ந்தேதி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்