பெரம்பலூரில், செவிலியர் உள்பட 10 பேருக்கு கொரோனா - அரியலூரில் 43 பேருக்கு தொற்று

பெரம்பலூரில் செவிலியர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2020-09-02 21:45 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,336 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், குணமடைந்த 1,187 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியுள்ள 132 பேர் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் நகரைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உள்பட 3 பேர், கிராமிய பகுதிகளான டி.களத்தூர், காடூர், விசுவக்குடி, தம்பிரான்பட்டி, லப்பைக்குடிகாடு, தொண்டமாந்துறை, குரும்பலூர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் என, மொத்தம் 10 பேருக்கு கொரோனாதொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 10 பேரும் திருச்சி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,346 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 2 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 906 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்று 43 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 841 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்