வெண்ணந்தூரில், வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது
வெண்ணந்தூரில் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வெண்ணந்தூர்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் மாணிக்கம் வீட்டின் பின்புற பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுமார் 15 கிலோ கஞ்சா செடிகளை வளர்த்து பராமரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்ததுடன் மாணிக்கத்தை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மாணிக்கம் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையானதும், கஞ்சாவை அதிக விலை கொடுத்து வாங்க முடியாததால் வீட்டின் பின்புற பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தொழிலாளி மாணிக்கத்தை போலீசார் சிறையில் அடைத்தனர்.
வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வைத்து வளர்த்து வந்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.