ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-08-28 21:30 GMT
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 67 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 3,322 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. மொத்தம் 652 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்