ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 39 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 599 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 48 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 4 ஆயிரத்து 40 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவிட் கேர் மையங்களில் 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 103 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 116 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 22 பேர் வீடு திரும்பினர்.