கோவில்பட்டி ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் ரூ.22 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி மும்முரம்
கோவில்பட்டி ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் ரூ.22 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி,
மதுரை-தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த வழித்தடத்தில் உள்ள ரெயில்வே கேட்டுகளுக்கு பதிலாக மேம்பாலம், சுரங்க வழிப்பாதை அமைக்கப்படுகிறது. அதன்படி கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தின் கீழே உள்ள ரெயில்வே கேட்டை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில், ரூ.2½ கோடி செலவில் சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதற்கிடையே மழை பெய்யும்போது, அந்த ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, ரெயில்வே துறை சார்பில், சுரங்க வழிப்பாதை முழுவதும் ரூ.22 லட்சத்தில் இரும்பு தகடாலான மேற்கூரை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் அங்கு தேங்கும் தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.