ரூ.3 ஆயிரம் கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள்: சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாது - நதிகள் சீரமைப்பு கழக தலைவர் நம்பிக்கை
சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாது, தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக தலைவர் மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சத்யகோபால் ஆய்வு செய்தார்.;
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளின்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக தலைவர் மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சத்யகோபால் ஆய்வு செய்தார். தாம்பரம் பெரிய ஏரி முடிச்சூர் சாலை சந்திப்பு பாப்பன் கால்வாய் பகுதியை பார்வையிட்ட அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் ரூ.200 கோடியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டை போல கனமழை பெய்தாலும், சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளபாதிப்பு ஏற்படாது. மேலும், ரூ.3 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் நிரந்தரமாக வெள்ள தடுப்பு பணிகளுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்படும்போது செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எந்த வெள்ள பாதிப்பும் ஏற்படாது’ என்றார்.
அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், ஜான் லூயிஸ் உடன் வந்தார்பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா உதவி பொறியாளர் குஜராத் கிருஷ்ண பிரபு மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.