மத்தியகுழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு கிரண்பெடி அறிவுறுத்தல்
மத்தியகுழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு முதல்-அமைச்சருக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தியுள்ளார்.;
புதுச்சேரி,
புதுவையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மத்திய விஞ்ஞானிகள் குழு மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்துள்ளது. அந்த குழுவினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
இந்தநிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை இந்த குழுவினர் சந்தித்து பேசினார்கள். அப்போது சில பரிந்துரைகளையும் அவர்கள் வழங்கினார்கள். மத்தியக்குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களையும், தெருக்களையும் கண்டறியவேண்டும், இதற்காக வீடு வீடாக சென்று ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளை நாள் ஒன்றுக்கு 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும்.
நோயாளிகளை பரிசோதனை மையம், கோவிட் கேர் சென்டர் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்ல போதிய வாகன வசதிகள் செய்யப்பட வேண்டும். பரிசோதனை மையங்களை மருத்துவக்கல்லூரிகள், சமுதாய சுகாதார மையங்களில் வைக்கவேண்டும். மக்கள் நெருக்கடியாக வசிக்கும் பகுதிகள், குடிசைப்பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்துவதைவிட கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.
தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவரை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் தற்போதைய விதிமுறைப்படி டிஸ்சார்ஜ் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்கள் சேகரிக்க தனியாக குழு உருவாக்கப்பட வேண்டும். மேற்கண்ட பரிந்துரைகளை மத்தியக்குழுவினர் வழங்கியுள்ளனர்.
இவற்றை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கவர்னர் கிரண்பெடி முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலருக்கு பரிந்துரை செய்துள்ளார்.