திருப்பூரில், ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை - சமூக வலைதளங்களில் பரவி வரும் வாக்குமூல வீடியோவால் பரபரப்பு

திருப்பூரில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மரண வாக்குமூல வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2020-08-27 06:50 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பொம் மநாயக்கன் பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவருடைய மனைவி கனகவள்ளி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ரவி ஆட்டோ ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.

கடந்த 3-ந்தேதி கனகவள்ளி மற்றும் அவருடைய மகள் காணாமல் போய் விட்டதாக ரவி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். இதில் இருவரும் ஈரோடு பெரியார்நகரில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் அனுப்பர்பாளை யம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கனகவள்ளி ரவி யுடன் செல்ல மறுத்ததுடன், அவருடைய தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி போலீசாரிடம் கூறிவிட்டு சென்று விட்டார். ஆனால் கனகவள்ளி மற்றும் அவருடைய மகள் மீண்டும் அதே மகளிர் விடுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த ரவி கடந்த 24-ந்தேதி காலை அங்கு சென்று தன்னுடன் வருமாறு இருவரிடமும் கெஞ்சி உள்ளார். ஆனால் அவர்கள் ரவியுடன் வர மறுத்ததுடன், அவரை மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக தெரிகிறது. இதனால் ரவி கடுமையான மனஉளைச்ச லுடன் அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டார்.

பின்னர் வீட்டில் தனியாக இருந்த ரவி வாழ்க்கையில் விரக்தியடைந்ததால் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி தூக்கு மாட்டி உள்ளார். அப்போது அங்கு சென்ற உறவினர்கள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காத தால், சந்தேகமடைந்த அவர் கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, ரவி உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரவி தற்கொலை செய்து கொள் வதற்கு முன்பு அவருடைய செல்போனில் மரண வாக்குமூலமாக பேசி பதிவு செய்த வீடியோவை உறவினர் கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில் ரவி, எல்லோரும் என்ன மன்னிச்சுடுங்க. இறுதி மரண வாக்குமூலம் இது. என் மனைவியையும், குழந்தையை யும் பிரிந்து என்னால இருக்க முடியல. அதுனாலதான் தொடர்ந்து போய் அவங்கள பார்த்து வந்தேன்.

ஆனா எனது மனைவியும், குழந்தையும் என்னைய கேவலப்படுத்தீட்டாங்க. அவங்க நல்லா இருக்கனும்னு நல்ல எண்ணத்துலதான் கடைசியா கூட பார்க்க போனேன். ஆனா அன்னைக் கும் என்னையும், என்னுடைய தாயாரையும் கொச்சைப் படுத்தி பேசிட்டாங்க. அவங்க கெட்டுப்போறத என்னால் சகிக்க முடியல. நான் உயிரோட இருந்து அவங்க கெட்டுப்போறத பார்க்கறத விட, அதுக்கு முன்னாடியே செத்து போயிடலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

இது என்னோட மரண வாக்குமூலம். ஈரோடு சூரம்பட்டியில் இருக்கும் 4 பேர்தான் இதற்கு காரணம். அவங்கதான் என்னோட மனைவி, மகளை மூளைச் சலவை செய்து என்னிடம் இருந்து பிரிச்சிட்டாங்க. என்னோட குடும்பம் என்கிற குருவி கூட்ட பிரிச்சிட்டாங்க. என் சாவுக்கு காரணம் அந்த 4 பேரும் தான். எனக்கு இதுவரை உதவியா இருந்த அனுப்பர்பாளையம் போலீ சாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்படியாவது எனது மனைவியையும், குழந்தையையும் அந்த 4 பேரிடம் இருந்து பிரித்து, இருவருக்கும் நல்ல புத்தி சொல்லி, திருப்பூருக்கு அழைத்து வந்து தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும். திரும்பவும் ஈரோடு போகாம பாத்துக்கனும்.

இவ்வாறு அந்த வீடியோ வில் ரவி பேசி உள்ளார்.

இதேபோல் ரவி அவருடைய மனைவியுடன் செல்போனில் பேசியபோது, ரவியை கனகவள்ளி தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்