மேல்மலையனூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அரசு ஊழியர் உள்பட 2 பேர் சாவு
மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அரசு ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரவீன் (வயது 19). சங்கர் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணியின் போதே அவர் இறந்து விட்டார். இதையடுத்து கருணை அடிப்படையில் அந்த வேலை பிரவீனுக்கு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பிரவீன் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் தனது வேலையை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செல்ல பிராட்டி கூட்டு சாலை அருகே, சென்ற போது பிரவீன் வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நூர் முகமது மகன் கலீல் (50) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கலீல் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதே போல் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட, பிரவீன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன கலீல் செஞ்சியில் உள்ள டீ கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்