ரத்த சோகை குறைபாடு உடைய கர்ப்பிணிகளுக்கு செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்

ரத்த சோகை குறைபாடு உடைய கர்ப்பிணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ம.ஜெயச்சந்திரன் செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Update: 2020-08-26 21:45 GMT
ராணிப்பேட்டை, 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் ரத்த சோகை குறைபாடு உடைய கர்ப்பிணிகளுக்கு இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கும் திட்ட தொடக்க விழா ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ம.ஜெயச்சந்திரன் ரத்த சோகை குறைபாடு உடைய கர்ப்பிணி பெண்களுக்கு செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி (சமூக பாதுகாப்பு), மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்