புதுக்கோட்டையில் உச்சம்: கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்தது - புதிதாக 143 பேருக்கு தொற்று

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்தது. புதிதாக 143 பேருக்கு தொற்று உறுதியானது.

Update: 2020-08-26 22:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. தொற்றால் பாதிப்படைந்தவர்களோடு, உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 60 வயது முதியவர், 53 வயது ஆண், 55 வயது பெண், 52 வயது ஆண் ஆகிய 4 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் புதிதாக நேற்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 517 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். நேற்று 181 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 135 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். தற்போது 1,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்