9 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் முடிவடைந்தது: அரும்பார்த்தபுரம் மேம்பாலம் திறப்பு எப்போது?
9 ஆண்டுகளாக நடந்த கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் அரும்பார்த்தபுரம் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் 100 அடி ரோடு மற்றும் அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் கட்ட கடந்த 2011-ம் ஆண்டு அப்போது ரெயில்வே துறை மந்திரியாக இருந்த மல்லிகார்ஜூன கார்கே அடிக்கல் நாட்டினார். இவ்விரு இடங்களிலும் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் தலா ரூ.5 கோடி செலவில் ரெயில்வே துறை சார்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
ஆனால் அவற்றை சாலையுடன் இணைக்கும் மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்றன. இந்த பணிகள் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செய்யப்பட்டன. 100 அடி ரோட்டு மேம்பால பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. இணைப்பு பாலத்துக்கான இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இழப்பீடு தொடர்பாக நில உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்றதால் கட்டுமான பணிகள் தொய்வடைந்தன.
கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணிகள் மெதுவாகவே நடைபெற்று வந்தன. 778 மீட்டர் இணைப்பு சாலையுடன் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன. மேம்பால பகுதிகளில் தார் ஊற்றப்பட்டு மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த மேம்பாலம் அர்ப்பணிக்கப்பட உள்ளது.
இந்த பாலம் திறக்கப்பட்டால் தற்போது வில்லியனூர் மற்றும் விழுப்புரத்துக்கு பொதுமக்கள் சுற்றிக்கொண்டு செல்வது தவிர்க்கப்படும். இதனால் எரிபொருளும் நேரமும் மிச்சமாகும். விரைவில் இந்த பாலத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.