பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் - பிரதமருக்கு ஆதித்ய தாக்கரே கடிதம்
பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, மந்திரி ஆதித்ய தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.;
மும்பை,
மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே பல்கலைக்கழக மற்றும் தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பததாவது.
பல்வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றன. தற்போது உள்ள சூழலில் தேர்வுகளை நடத்துவது சாத்தியம் இல்லை. எனவே தேர்வுகளை நிறுத்திவைப்பதே சிறந்தவழி. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு, சிவப்பு மண்டல பகுதிகள் அதிகரித்து வருகின்றன. மேலும் நடப்பு கல்வி ஆண்டை ஜூன், ஜூலைக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து தொடங்குவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.