தொழில் போட்டி காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி படுகொலை - பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
தொழில் போட்டி காரணமாக வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்த பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் கல்யாண் வால்துணி அசோக்நகரை சேர்ந்தவர் ரோஷன்(வயது45). இவர் அதே பகுதியில் துணி சலவை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது கடை அருகே சலாலூதீன் அன்சாரி என்பவர் பேக்கரி வைத்து நடத்தி வந்தார்.
தற்போது ஊரடங்கு காரணமாக ரோஷன் தொழில் முடங்கியது. இதனால் வருமானமின்றி தவித்த அவர், பிரட் மற்றும் ரொட்டி வகைகளை தனது கடையில் வைத்து விற்பனை செய்து வந்தார். இதனால் பேக்கரி நடத்தி வந்த சலாலூதீன் அன்சாரிக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ரோஷனின் தம்பி அமர் பகதூர் என்பவர் கடைக்கு வந்தார். அப்போது, உங்கள் கடையில் ரொட்டி வகைகளை விற்கக்கூடாது என கூறி பேக்கரி உரிமையாளர் சலாலூதீன் அன்சாரி அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த சலாலூதீன் அன்சாரி தனது சகோதரர் காசிமுதீன், உறவினர் முகமது நதீம் அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து அமர் பகதூரை தாக்கினர். இதுபற்றி அறிந்த ரோஷன் தனது தம்பியை காப்பாற்ற அங்கு ஓடிவந்தார்.
இதனை கண்ட அவர்கள் ரோஷனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ரோஷன் அடிதாங்காமல் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து சலாலூதீன் அன்சாரி உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேக்கரி கடை உரிமையாளர் சலாலூதீன் அன்சாரி மற்றும் காசிமுதீன், முகமது நதீம் அன்சாரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.