வடகர்நாடகத்தில் மழை-வெள்ள பாதிப்புகளை எடியூரப்பா நேரில் ஆய்வு செய்தார் - நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்படும் என பேட்டி
வடகர்நாடகத்தில் மழை-வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹெலிகாப்டரில் சென்றபடி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கடந்த 20 நாட்களாக பருவமழை வடகர்நாடகம், கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்களில் தீவிரமாக கொட்டி தீர்த்தது. இதனால் பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக், தார்வார் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழைக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆடு, மாடுகள் என 66 கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளன. மேலும் 92 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, அதில் 4,485 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கனமழைக்கு 385 வீடுகள் முற்றிலும் இடிந்த விழுந்தன. அத்துடன் 7,238 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் 89 ஆயிரத்து 440 எக்டேரில் சாகுபடி செய்துள்ள வேளாண் பயிர்களும், 51 ஆயிரத்து 803 எக்டேரில் தோட்டக்கலைத்துறை பயிர்களும் நாசமாகியுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் நேரில் ஆய்வு செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வந்தன.
இந்த நிலையில் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, தார்வார், கதக் ஆகிய 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஹெலிகாப்டர் மூலமாக மழை பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி எடியூரப்பா பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று 5 மாவட்டங்களில் முதல்-மந்திரி எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக அவர் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் பெலகாவி சாம்ரா விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் விமான நிலையத்திலேயே பெலகாவி, தார்வார் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது பெலகாவியில் மழையால் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி, எடியூரப்பாவிடம் மாவட்ட கலெக்டர் மனு கொடுத்தார். பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
மழை மற்றும் வெள்ளத்தால் பெலகாவி, தார்வார் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் இருந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். கொரோனா பாதிப்பு இருப்பதால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேவைப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பெலகாவி மற்றும் தார்வார் மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதற்கு தேவையான நிவாரண நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை பாதிப்பு மற்றும் மற்ற திட்டங்களை செயல்படுத்த பெலகாவி மாவட்டத்திற்கு ரூ.412 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கவும் தயாராக இருக்கிறேன்.
பெலகாவியில் மழையால் பாதித்த மக்கள் வீடுகளை கட்டிக் கொள்ளவும், சாலை உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளவும் ரூ.174 கோடி நிதி மாவட்ட கலெக்டரின் கணக்கில் உள்ளது. பெலகாவியில் வீடுகளை இழந்த 44 ஆயிரத்திற்கு 156 பேருக்கு, வீடுகள் கட்ட தேவையான நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பெலகாவி மற்றும் தார்வாரில் நிலவும் பிரச்சினைகள் பற்றி எனது கவனத்திற்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் அரசின் நிதி நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும், மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசு தேவையான நடவடிக்களை எடுத்து வருகிறது. விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி, மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்களை பெற்றுக் கொள்ள உள்ளேன். சரியான நிவாரணம் வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும். அதற்கான முழு அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் டெல்லிக்கு செல்ல உள்ளேன். அப்போது மத்திய அரசிடம் கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கும்படி கோரிக்கை வைக்கப்படும். மத்திய அரசு, கர்நாடகத்தில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிவாரணத்தை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பெலகாவி மற்றும் தார்வார் மாவட்டங்களில் கடந்த ஆண்டும் (2019) மழை, வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தது. கடந்த ஆண்டுக்கான நிவாரண உதவிகள் மக்களுக்கு கிடைத்துள்ளதா? என்பதை கேட்டு அறிந்துள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெலகாவி புறநகர் தொகுதி எம்.எல்.ஏ.வான லட்சுமி ஹெப்பால்கர் பேசும் போது பெலகாவி புறநகர் தொகுதியில் மழையால் சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை செலவாகும். எனவே பெலகாவி புறநகர் தொகுதியில் மழை பாதிப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிவாரணம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, தார்வார் மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஆர்.அசோக், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பெலகாவி சாம்ரா விமான நிலையத்தில் இருந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக பெலகாவி, தார்வார், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி எடியூரப்பா பார்வையிட்டார்.
அவருடன் மந்திரிகள் அசோக், ரமேஷ் ஜார்கிகோளி, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் ஹெலிகாப்டரில் பறந்தபடி மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்கள்.